ADDED : ஆக 18, 2024 11:37 PM

ராம்நகர்: வீட்டில் சார்ஜிங் செய்த, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.
ராம்நகரின் மாகடி டவுனை சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மா. தறி அமைத்து துணிகளை நெசவு செய்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். நேற்று காலை ஸ்கூட்டருக்கு வீட்டிற்கு வைத்து, சார்ஜிங் செய்தார். திடீரென ஸ்கூட்டரில் தீப்பிடித்தது. தீ மளமளவென வேகமாக பரவி வீட்டில் இருந்த, வீட்டு உபயோக பொருட்கள் மீதும் பரவி எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த லட்சுமி நரசிம்மா, அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, தீப்பிடித்த ஸ்கூட்டரை வெளியே துாக்கி சென்றனர்.
பின், வீட்டு உபயோக பொருட்கள் மீது பிடித்த தீயை, தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஸ்கூட்டரில் தீப்பிடித்தற்கான காரணம் தெரியவில்லை. தீயில் ஸ்கூட்டரும், வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன.

