ஜூலை 8, 9, 10ல் மின்னணு ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு
ஜூலை 8, 9, 10ல் மின்னணு ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 06, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி: விரைவில் நடக்கவுள்ள ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, மின்னணு ஓட்டு இயந்திரங்கள், வரும் 8 முதல் 10 ம் தேதி வரை சரிபார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்.பி.,யானதால், காலியான ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதையடுத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது.
இதில், அரசியல் கட்சியினர், கட்சி வழங்கிய அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வர வேண்டும்' என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.