16 ஆண்டு கால பயிற்சிக்கு பின்னர் குருவாயூர் கோயிலுக்கு திரும்பிய யானை
16 ஆண்டு கால பயிற்சிக்கு பின்னர் குருவாயூர் கோயிலுக்கு திரும்பிய யானை
ADDED : ஆக 24, 2024 02:23 AM
திருவனந்தபுரம்:கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான சங்கரநாராயணன் என்ற யானை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
விழாவில் மிரண்டு ஓடிய யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதை அடுத்து குருவாயூர் புணர் தூர் கோட்டையில் உள்ள யானைகள் முகாமில் சங்கரநாராயணன் கொண்டு செல்லப்பட்டு சங்கிலியால் கட்டிப்போடப்பட்டது.
அதன் பாகங்கள் ஷஜி, ஷிபு இந்த முகாமிலேயே தங்கி யானையை பராமரித்து வந்தனர். நீண்ட சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பின்னர் பாகன்களின் கட்டளைக்கு பணிந்து யானை நடக்க தொடங்கியது. இதைத்தொடர்ந்து குருவாயூர் கோயிலுக்கு யானை கொண்டு வரப்பட்டது. சீவேலி நிகழ்ச்சியில் சங்கரநாராயணன் யானை மீது சுவாமி விக்ரகம் ஏற்றப்பட்டு செண்டை மேளம் முழங்க வீதியுலா வந்தது.
முன்னதாக 16 ஆண்டுகளாக முகாமில் தங்கி சங்கரநாராயணன் யானையை பராமரித்த பாகன்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் குருவாயூரில் நடைபெறும் விழாக்களில் இந்த யானை உற்சவமூர்த்தியுடன் வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.