ADDED : ஏப் 27, 2024 11:22 PM
ராய்ச்சூர்: வீட்டில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய, பிணவறை ஊழியர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர்.
ராய்ச்சூர் சிந்தனுார் கெங்கல் கிராமத்தில் வசித்தவர் அம்பம்மா, 57. நேற்று காலை வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் தாடேசுகுரு கிராமத்தில் உள்ள, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அம்பம்மா உடலை பிரேத பரிசோதனை செய்ய, பிணவறை ஊழியர்கள் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
அம்பம்மா குடும்பத்தினர் 1,500 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் 2,000 ரூபாய் கண்டிப்பாக வேண்டும் என்று, பிணவறை ஊழியர்கள் கறாராக கூறினர்.
இதுபற்றி அறிந்த கர்நாடக மாநில தொழிலாளர் சங்கத்தினர், பிணவறை முன் போராட்டம் நடத்தியதால், லஞ்சம் கேட்ட ஊழியர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து வேறு ஊழியர்கள், அம்பம்மா உடலை பிரேத பரிசோதனை செய்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

