தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'ஈஸ்வரப்பாவால் பா.ஜ.,வுக்கு பலத்த அடி கிடைக்கும்'

'ஈஸ்வரப்பாவால் பா.ஜ.,வுக்கு பலத்த அடி கிடைக்கும்'

'ஈஸ்வரப்பாவால் பா.ஜ.,வுக்கு பலத்த அடி கிடைக்கும்'


ADDED : ஏப் 16, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொகா, : ''லோக்சபா தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, சுயேச்சையாக போட்டியிடுவதால், பா.ஜ., பலத்த அடி வாங்கும்,'' என காங்கிரஸ்எம்.எல்.ஏ., பேளூர் கோபால கிருஷ்ணா தெரிவித்தார்.

ஷிவமொகா சாகராவில் நேற்று அவர் கூறியதாவது:

ஷிவமொகாவில் சுயேச்சை வேட்பாளராகஈஸ்வரப்பா களமிறங்கி உள்ளார். ஆனால் அவர் களத்தில் இருப்பாரா, இல்லையா என்பது, ஏப்ரல் 19க்கு பின் தெரியும். ஒருவேளை இவர் களத்தில் தங்கினாலும், காங்கிரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ.,தான் பலத்த அடிவாங்கும். இந்த கட்சிக்கு விழ வேண்டிய ஓட்டுகள், ஈஸ்வரப்பாவுக்கு செல்லும். எனவே பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும்.

அரசியலில் யாருக்குமே, வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவரது திறமை என்ன என்பது தெரியும். ராகவேந்திரா முதன் முறையாக போட்டியிட்ட போது, அவரது சாதனை எதுவும் இருக்கவில்லை. அது போன்று கீதா சிவராஜ்குமாருக்கு, ஒரு முறை வாய்ப்பு அளித்தால், அவரும் தன் திறமையை நிரூபிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us