சோலார் திட்டத்தை விரைவுபடுத்த எஸ்காம் நிறுவனங்களுக்கு உத்தரவு
சோலார் திட்டத்தை விரைவுபடுத்த எஸ்காம் நிறுவனங்களுக்கு உத்தரவு
ADDED : மே 27, 2024 07:34 AM
பெங்களூரு: கர்நாடகாவில் மின் வினியோக நிறுவனத்தின் கீழ், பெஸ்காம் எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனம்; மெஸ்காம் எனும் மங்களூரு மின் வினியோக நிறுவனம்; ஹெஸ்காம் எனும் ஹூப்பள்ளி மின் வினியோக நிறுவனம்; ஜெஸ்காம் எனும் குல்பர்கா மின் வினியாக நிறுவனம்; செஸ்காம் எனும் சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் என ஐந்து நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும், எஸ்காம் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும்.
கர்நாடகாவில் சோலார் திட்டத்தை அமல்படுத்த, கடந்தாண்டு டிசம்பரில் பெஸ்காம் நிர்வாக மேலாளர் தலைமையில் நிபுணர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இக்கமிட்டி, இணையதளம், விண்ணப்பம் பரிசீலனை, வழிகாட்டுல்கள், உத்தரவுகள் என 14 வழிகாட்டுதல்களை முன்மொழிந்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த கோரி, மின் துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழிகாட்டுதல்கள்
l சோலார் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
l சிறு வாடிக்கையாளர்களிடம் 1 முதல் 3 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ஊக்குவித்தல்
l எஸ்காமின் அனைத்து நிறுவனங்களுக்கும் பெஸ்காம் தலைமை அலுவலகமாக செயல்பட்டு, இணையதளம் பராமரித்தல்
lவிண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், மின்சாரம் வாங்குவதில் ஒப்பந்தம், மின் தொகுப்பு பரிவர்த்தனைகளுக்கு விற்பனை ஆகியவை ஆன்லைனில் நடக்கும்
l ஆன்லைனில் பில் செலுத்துவதற்கு வசதியாக மே 31ம் தேதிக்குள் சோலார் பில்லிங் மென்பொருள் தயாரித்தல்
l கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல்படி, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மூன்று நாட்களுக்குள் கணக்கு பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும். அவைகளுக்கு இரண்டு நாட்களுக்குள் ரசீது வழங்கப்படும்
l ஆவணங்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், எஸ்காம் அதிகாரிகளுக்கு அபராதம்
l ஸ்மார்ட் மீட்டர் போன்ற பதிவு சேர்க்கைக்காக, பெஸ்காமில் மொபைல் செயலி உருவாக்குதல்
l பி.பி.ஏ., எனும் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போன்று, எஸ்காம்கள் பின்பற்ற வேண்டும்
l அனைத்து எஸ்காம்களும் ஒரே மாதிரியான மின் கட்டணம்
l சோலார் திட்டம் தொடர்பாக எஸ்காம் வெளியிட்டுள்ள உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.

