"ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்" - பிரதமர் மோடி
"ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்" - பிரதமர் மோடி
UPDATED : ஏப் 19, 2024 11:55 AM
ADDED : ஏப் 19, 2024 07:29 AM

புதுடில்லி: ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பதிவை தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் இன்று துவங்கியது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில், இந்தத் தொகுதிகளில் ஓட்டளிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை காக்கும் தேர்தல்
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு. உங்கள் ஓட்டுகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
ஒவ்வொரு ஓட்டும், அடுத்த தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளுங்கள். ஜனநாயகத்தை காக்கும் தேர்தல். வெறுப்பைத் தோற்கடித்து ஒவ்வொரு மூலையிலும் அன்பின் கடையைத் திறப்போம்.
கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் ஓட்டுகள் மூலம் மருந்தளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

