ADDED : ஆக 09, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோஸ் அவென்யூ:கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து, டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்த வழக்கில் காவலை நீட்டிப்பதற்காக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சி.பி.ஐ., தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை வரும் 12ம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.