பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : மே 26, 2024 01:22 PM

சிம்லா: '22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்க முடியவில்லை' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் பேசியதாவது: மோடி பிரதமராக இருக்கும் காலத்தில் மட்டும் தான் அதானி நிறுவன பங்கு சந்தைகள் உயரும். அரசியலைப்பு சட்டத்தை ஒழிப்போம் என பா.ஜ., தலைவர்கள் கூறுகிறார்கள். அரசு துறைகளில் 30 லட்சம் காலியிடங்களை கண்டறிந்துள்ளோம். அந்த வேலைகளை இந்திய இளைஞர்களுக்கு வழங்குவோம். பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு, ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
விவசாய கடன் தள்ளுபடி
ஏழைக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வரும் வரை ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 10 ஆண்டுகளில் 22 பேரின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்க முடியவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.