ADDED : பிப் 22, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி: ஹாவேரியின், கள்ளிஹாளா கிராமத்தில் வசித்தவர் விவசாயி பிரகாஷ் பசவராஜ் ஹூகாரா, 35. இவருக்கு திருமணம் செய்து வைக்க, பெற்றோர் பல இடங்களில் பெண் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
கடந்த 12 ஆண்டுகளாக பெண் தேடியும், யாரும் இவருக்கு பெண் கொடுக்கவில்லை. இவ்வளவு வயதாகியும் திருமணமாகவில்லை என்பதால், மனம் நொந்த அவர், நேற்று அதிகாலை வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

