ADDED : மே 29, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு,: பாம்பு கடித்தது தெரியாமல் அலட்சியமாக இருந்த விவசாயி உயிரிழந்தார்.
சிக்கமகளூரு, தரிகெரேவின் கரகுச்சி கிராமத்தில் வசித்தவர் விவசாயி கங்கப்பா, 58. இவர் நேற்று முன்தினம் மாலை, வயலில் பணியாற்றியபோது, காலில் இரண்டு முறை பாம்பு கடித்தது.
அக்கம், பக்கம் சுற்றி பார்த்தும் பாம்பு தென்படவில்லை. முள் குத்தியிருக்கும் என, நினைத்து பணியை தொடர்ந்தார்.
வீட்டுக்கு திரும்பியபோது, உடல் சோர்வு ஏற்பட்டது. குடும்பத்தினர் கேட்டபோது, ஏதோ முள் குத்திவிட்டது. இதனால் சோர்வாக உள்ளது என, கூறினார். உணவு சாப்பிட்டு விட்டு உறங்கினார்.
பாம்பு விஷம் தலைக்கு ஏறியதில், விவசாயி உயிரிழந்தார். அப்போதுதான் குடும்பத்தினருக்கு, கங்கப்பாவை பாம்பு கடித்தது தெரியவந்தது.