ADDED : மே 16, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கிழக்கு டில்லியில் காகித கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஷகர்பூர் பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
காலை 7:00 மணி வரை மீட்புப் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்தில் இங்கு பணியாற்றி வந்த சதேந்திர பாஸ்வான் என்பவர் உயிரிழந்தார். இங்கு அனுமதியின்றி காகித குடோன் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது இது இரண்டாவது முறை என்று தெரிய வந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.