49 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை
49 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை
ADDED : மே 21, 2024 01:18 AM

புதுடில்லி,பீஹார், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில், 49 தொகுதி களுக்கு நேற்று நடந்த ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மேற்கு வங்கத்தின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
நாடு முழுதும் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.
ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், மே 7ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், 93 தொகுதிகளுக்கும், மே 13ல் நடந்த நான்காம் கட்ட தேர்தலில், 96 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்நிலையில், ஐந்தாம் கட்டமாக, ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில், 49 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
பீஹாரில் ஐந்து; ஜார்க்கண்டில் மூன்று; மஹாராஷ்டிராவில் 13; ஒடிசாவில் ஐந்து; உத்தர பிரதேசத்தில் 14; மேற்கு வங்கத்தில் ஏழு மற்றும் யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
மேலும், ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளில், 28 தொகுதிகளுக்கும் கடந்த 13ல் ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாம் கட்டத்தில், 35 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடந்தது. சில இடங்களில், வாக்காளர்கள் முன்கூட்டியே வரிசையில் நின்றதால், மாலை 6:00 மணிக்கு பின்னும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்நிலையில், இரவு 7:00 மணி நிலவரப்படி, 57.38 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில் 73 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக மஹாராஷ்டிராவில் 48.88 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.
மேற்கு வங்கத்தில் ஏழு லோக்சபா தொகுதி களுக்கு நடந்த ஓட்டுப்பதிவில், பாரக்பூர், பொங்கான், ஆரம்பாக் ஆகிய இடங்களின் பல்வேறு பகுதிகளில், திரிணமுல் காங்., - பா.ஜ., தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.
ஆரம்பாக் தொகுதியில் உள்ள கானாகுல் பகுதியில், திரிணமுல் காங்., - பா.ஜ., தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஹூக்ளி தொகுதியில், பா.ஜ., சிட்டிங் எம்.பி., யும், கட்சி வேட்பாளருமான லாக்கெட் சாட்டர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., ஆஷிமா
தொடர்ச்சி 14ம் பக்கம்

