ADDED : ஜூலை 06, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பிரேமகுமாரி, 60. நேற்று காலமானார்.
தங்கவயல் நகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் தலைவர் சம்பத்குமார் மனைவி பிரேமகுமாரி. முன்னாள் கவுன்சிலரான இவர், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, நகர காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, நகராட்சி உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜெயின் இடுகாட்டில் நேற்று மாலை, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.