ADDED : ஏப் 14, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா: கார், சிமென்ட் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.
விஜயபுரா நகரை சேர்ந்த சிலர், பாகல்கோட், ஜமகன்டியின் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.
நேற்று காலை விஜயபுரா, பபலேஸ்வராவின், அர்ஜுனகி கிராமத்தின் அருகில் சென்றபோது, காரும், எதிரே வந்த சிமென்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த அர்ஜுன் குஷால்சிங் ரஜபூத், 32, மேகராஜ் அர்ஜுன் ரஜபூத், 12, ரவிநாத் சனிலால் பெத்தார், 52, புஷ்பா ரவிநாத் பெத்தார், 40, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
தகவலறிந்து எஸ்.பி., ரிஷிகேஷ் பகவான், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பபலேஸ்வரா போலீசார் விசாரிக்கின்றனர்.

