பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி
பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி
ADDED : ஆக 07, 2024 11:58 PM
ப்ரீத் விஹார்: கிழக்கு டில்லியின் ப்ரீத் விஹார் பகுதியில் தன் மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த 31 லட்சம் ரூபாயை இழந்த முதியவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
ப்ரீத் விஹார் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், தன் இளைய மகள் திருமணத்திற்காக 31 லட்ச ரூபாய் சேமித்து வைத்திருந்தார். மேலும் பணம் தேவைப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி அவர்கள் விளம்பரம் செய்திருந்தனர். அதை நம்பி, முதலில் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். லாபத்துடன் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர்.
அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், மேலும் 31.56 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். சில வாரங்களில் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.