ADDED : மார் 14, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு, ஆலத்தூரில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக, 'டயாலிசிஸ் கிட்' வழங்கப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூரை மையமாக கொண்டு மதர் அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, 304 சிறுநீரக நோயாளிகளுக்கு 'டயாலிசிஸ் கிட்' வழங்க திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின் முதல் கட்டமாக, ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நோயாளிகளுக்கு 'டயாலிசிஸ் கிட்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆலத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் ஷைனி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சந்திரன் பருவாய்க்கல், அறக்கட்டளை தலைவர் ஜஹாங்கீர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.