ADDED : மே 03, 2024 11:29 PM
கொப்பால் : மழை பெய்ய வேண்டி கங்காவதியில் கிராம மக்கள், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் சூர்யநாயக்தாண்டா கிராமத்தினர் மழை பெய்ய வேண்டி, நேற்று தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்காக கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து இரண்டு தவளைகளை கொண்டு வந்தனர்.
திருமணத்தை ஒட்டி, கிராமத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வீடுகளில் இனிப்புகள் செய்யப்பட்டு, அனைவரும் பரிமாறிக் கொண்டனர்.
கிராமத்தினர் கூறுகையில், 'அதிக வெயிலால் தண்ணீர் இன்றி உயிர்கள் தவிப்பதாலும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கையிலும் இத்திருமணம் நடத்தப்பட்டது. மனிதன் இயற்கையோடு வாழ வேண்டும். எனவே மரங்களை வெட்டாமல், பாறைகளை உடைக்காமல், உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டால், சுற்றுச்சூழல் சீராகும்' என்றனர்.