ADDED : ஏப் 27, 2024 11:07 PM

ஷிவமொகா: ஈடிகா சமூக மடாதிபதியிடம் ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார் ஆசி பெற்றார்.
ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார், ரிப்பன்பேட் கர்த்திகெரே கிராமத்தில் உள்ள, ஈடிகா சமூக மடத்திற்கு நேற்று சென்றார். மடாதிபதி ரேணுகானந்த சுவாமியை சந்தித்து ஆசிபெற்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
இந்திய கலாசாரம் பற்றி பல மணி நேரம் பேசுபவர்களுக்கு, பெண் நெற்றியில் வைக்கும் குங்குமத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியாதா? தாலி, குங்குமம் பெண்களின் உணர்ச்சிகரமான விஷயம். ஓட்டுகளை பெறுவதற்காக, ஹிந்து பெண்களின் தாலியை காங்கிரஸ் பறிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி பேசியது கண்டிக்கத்தக்கது.
இது மாதிரியான பேச்சு, பா.ஜ.,வின் ஆளுமை பிரதிபலிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஈஸ்வரப்பாவுக்கு ஷிவமொகாவில் உள்ள பிரச்னை பற்றி தெரியாது. வறட்சியால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி இழக்கும் என்று கணிப்பு உள்ளது. இதனால் காரணம் இல்லாமல் காங்கிரசை விமர்சிக்க ஆரம்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் அவர் கணவரும் நடிகருமான சிவராஜ்குமாரும் சென்றிந்தார்

