ADDED : மே 11, 2024 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், மரத்தில் கார் மோதி தாத்தா மற்றும் பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் குசேரா அருகே நேற்று காலை, ஒரு காரில் ரத்னராம்,65, அவரது மகள் மற்றும் அவரது பேரன் கமலேஷ், 12, ஆகிய இருவரும் சென்றனர்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர மரத்தில் மோதியது. தாத்தாவும் பேரனும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ரத்னாராம் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.