பா.ஜ.,வில் ஐக்கியமானார் ஹரியானா காங். பெண் எம்.எல்.ஏ.,
பா.ஜ.,வில் ஐக்கியமானார் ஹரியானா காங். பெண் எம்.எல்.ஏ.,
UPDATED : ஜூன் 19, 2024 08:15 PM
ADDED : ஜூன் 19, 2024 08:04 PM

புதுடில்லி: ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ., கிரண் சவுத்ரி, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் ஐக்கியமானார்.
ஹரியானாவின் தோஷாஹாம் தொகுதி காங்., பெண் எம்.எல்.ஏ.. கிரண் சவுத்ரி, 68 இவரது மகள் சுருதிசவுத்ரி. இருவரும் காங்.,கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தனர்..
இருவரும் டில்லி சென்று பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான மனோகர்லால் கட்டார் முன்னிலையில் பா.ஜ.வில் ஐக்கியமானார்.
விலகல் ஏன் ?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தன் மகள் சுருதிசவுத்ரிக்கு காங்., மேலிடம் எம்.பி.,சீட் தரவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவாளருக்கு சீட் வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த கிரண் சவுத்ரி, தன் மகளுடன் பா.ஜ.வில் ஐக்கியமானார்.
ஹரியானா சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இருவரும் கட்சியிலிருந்து விலகியது ஹரியானா காங். , கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.