ஹரியானா தேர்தல்: ஆம்ஆத்மியுடன் காங்., தொடர்ந்து பேச்சுவார்த்தை
ஹரியானா தேர்தல்: ஆம்ஆத்மியுடன் காங்., தொடர்ந்து பேச்சுவார்த்தை
ADDED : செப் 08, 2024 08:41 PM

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்.,ஆம் ஆத்மி கூட்டணி இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் விரைவில் முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 12-ம் தேதி ஆகும். இதனிடையே மொத்தம் உள்ள 90 இடங்களில் காங்., ஆம் ஆத்மி போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தீபக் பாபாரியா உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டு இருக்கிறது. நாளைக்குள் கூட்டணி முடிவடையும் வாய்ப்புக்கள் இருக்கிறது. காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
தற்போது வரையில் பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டு இருக்கிறது. இருப்பினும் மாநில மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது எனவும், தனிப்பட்ட கட்சி மற்றும் வேட்பாளர்களின் கோரிக்கைககள ஒதுக்கி வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இருதரப்புஇடையேயான பேச்சுவார்த்தையின் போது ஆம் ஆத்மி 10 இடங்கள் வரையில் எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது.ஆனால் காங்., தரப்பில்இருந்து ஆம் ஆத்மிக்கு 5-7 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.