sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயலில் கனமழை: மின்னல் தாக்கி விவசாயி பலி

/

தங்கவயலில் கனமழை: மின்னல் தாக்கி விவசாயி பலி

தங்கவயலில் கனமழை: மின்னல் தாக்கி விவசாயி பலி

தங்கவயலில் கனமழை: மின்னல் தாக்கி விவசாயி பலி


ADDED : மே 07, 2024 11:15 PM

Google News

ADDED : மே 07, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : தங்கவயலில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த கனமழையில் விவசாயி ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன.

கோடை வெப்பத்தில் தவித்து வந்த தங்கவயலில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கட்டமாத மங்களா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்லக்கெரே கிராமத்தில் மாட்டு தொழுவத்தில் மாடுகளை கட்டிப்போட சிவப்பா 38, என்ற விவசாயி சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இறந்த சிவப்பாவுக்கு மனைவி, நான்கு மகள்கள் உள்ளனர்.

ராபர்ட்சன்பேட்டை- உரிகம் அம்பேத்கர் சாலையில் மழைநீர் கால்வாய் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில் ராபர்ட்சன்பேட்டை 4 வது பிளாக் பகுதியில் உள்ள பலர், வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இரவு முழுதும் பலரும் தண்ணீரை வெளியேற்றுவதிலேயே காலத்தை கழித்தனர்.

நேற்று நகராட்சி ஆணையர் பவன் குமார், வார்டு கவுன்சிலர் ரமேஷ் ஜெயின் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியில் பார்வையிட்டனர்; நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.

சாய்ந்த மரங்கள்


தங்கவயலில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், சாம்பியன் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியின் நுழைவாயிலில் இருந்த பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது.

இதனால், பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்த பள்ளி பெயர் பலகை, 'மெயின் கேட்' துாண் இடிந்து வீழ்ந்தது.

சாம்பியன் ரீப் கில்பர்ட்ஸ் சுரங்கத்தின் சாலை வழியில் உள்ள பங்களா வளாகத்தின் ஒன்றில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சாமிநாதபுரம் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் அருகில் இருந்த பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. ராபர்ட்சன்பேட்டை, பி.எம்., சாலையில் நடைபாதை ஓடுகள் பெயர்ந்து, உடைந்து சேதமடைந்தது.

நிவாரண பணி


ராபர்ட்சன்பேட்டை 4 வது பிளாக்கில் கால்வாய் கழிவுநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில், நகராட்சி ஆணையர் பவன் குமார், நிவாரண பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

7.5.2024 / ஜெயசீலன்

8_DMR_0005

வேருடன் சாய்ந்த மரம். இடம் : செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி, சாம்பியன் ரீப் தங்கவயல்.

8_DMR_0006

வேருடன் சாய்ந்த மரம். இடம்: சாமிநாத புரம்.

8_DMR_0007

ஆபத்தில் உள்ள மரம். இதனை வெட்டி அகற்ற அப்பகுதி மக்கள் கோருகின்றனர். இடம்: மாரிகுப்பம் கார்பென்டர் லைன்.

8_DMR_0008

மழைநீர் கால்வாய், குப்பைகளால் மூடி கிடப்பதால் சாக்கடை நீர் வீடுகளில் புகுந்ததை நேரில் பார்வையிட்ட நகராட்சி ஆணையர் பவன் குமார், கவுன்சிலர் ரமேஷ் ஜெயின். ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டன. இடம்: ராபர்ட்சன்பேட்டை 4 வது பிளாக்.






      Dinamalar
      Follow us