UPDATED : ஜூலை 15, 2024 08:23 PM
ADDED : ஜூலை 15, 2024 07:13 PM

திருவனந்தபுரம்: கேரளா முழுதும் வரும் 19-ம் தேதிவரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.எம்.டி. எனப்படும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளாவில் வரும் ஜூலை 19-ம் தேதி வரை கனமழை தொடரும், இதில் மலப்புரம், கண்ணுர், காசர்கோடு, கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.கனமழை காரணமாக கேரளாவில் வடமாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 24 மாவட்டங்கள்
தமிழகத்தில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாலை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அவலாஞ்சியில் 12 செ.மீ., மழை
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், இன்று காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, 12 செ.மீ., மழை கொட்டித்தீர்த்தது; அப்பர் பவானியில் 10.8 செ.மீ., எமரால்டு 6.3 செ.மீ., குந்தா 4.3 செ.மீ., அப்பர் கூடலுார், சேரங்கோட்டில் தலா 3.3 செ.மீ., மழை பதிவு
வால்பாறையில் நாளை பள்ளி விடுமுறை
கன மழை காரணமாக வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16--07-24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.