ஹிமாச்சலில் மேக வெடிப்பு: 13 பேர் பலி மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரம்
ஹிமாச்சலில் மேக வெடிப்பு: 13 பேர் பலி மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஆக 08, 2024 11:56 PM

மண்டி: ஹிமாச்சல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கு உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்றும் ஹிமாச்சல் முழுவதும் 5 முதல் 7 செ.மீ., வரை மழை பெய்தது. மண்டி மாவட்டத்தின் ஜோஹிந்தர் நகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தது. மேகவெடிப்பால் ஸ்ரீகந்த் பகுதி பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சமேஜ் மற்றும் பாகி கிராமங்களைச் சேர்ந்த 45 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.
இந்நிலையில் இந்திய வானிலை மையமானது, ஹிமாச்சலின் பிலாஸ்பூர், ஹமிர்பூர், காங்க்ரா, சம்பா மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.