'இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: ஐ.நா கருத்து
'இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: ஐ.நா கருத்து
UPDATED : மார் 29, 2024 03:33 PM
ADDED : மார் 29, 2024 02:23 PM

புதுடில்லி: இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என ஐ.நா., செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து ஐ.நா., செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம்
இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, '' தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என பதில் அளித்தார்.
அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது.

