முறையாக உணவு தயாரிக்காத விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'
முறையாக உணவு தயாரிக்காத விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 18, 2024 11:31 PM
ஷிவமொகா: விடுதி மாணவியருக்கு முறையான உணவு தயாரிக்காத வார்டனை, 'சஸ்பெண்ட்' செய்யுமாறு, காங்., - எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா உத்தரவிட்டார்.
ஷிவமொகா மாவட்டம், ஹொசநகரின் ரிப்பன்பேட்டில் பொது பிரீ மெட்ரிக் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சாகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா திடீரென ஆய்வு நடத்தினார்.
விடுதியில் தங்கியிருந்த மாணவியரிடம், வசதிகள், தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து விசாரித்தார். பின், அங்கிருந்து சமையல் அறைக்கு சென்ற, எம்.எல்.ஏ., மாணவியருக்கு இன்றைய தினம் வழங்கப்படும் உணவு குறித்து கேட்டார். 'மதியம் கேழ்வரகு களி உருண்டை தானே தர வேண்டும். ஏன், மெனுப்படி உணவு தயாரிக்கவில்லை' என கேட்டார்.
வார்டன் இந்திரா, சரியான பதில் அளிக்காததால், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம், இந்திராவை சஸ்பெண்ட் செய்யும்படி உத்தரவிட்டார். அத்துடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட பேலுார் கோபால கிருஷ்ணா, மற்ற ஊழியர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி, விளக்கம் கேட்குமாறும் உத்தரவிட்டார்.

