ADDED : மார் 28, 2024 10:45 PM

ஜிகனி : குடும்பம் நடத்த வர மறுத்த, மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர், கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லைச் சேர்ந்தவர் முபாரக், 28. இவரது மனைவி அர்பியா தாஜ், 24. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையில் அடிக்கடி, குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் குழந்தையை துாக்கிக் கொண்டு, ஜிகனியில் உள்ள தாய் வீட்டிற்கு, அர்பியா தாஜ் கடந்த மாதம் சென்றார். அதன்பின்னர் கணவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.
கடந்த வாரம் மாமியார் வீட்டிற்குச் சென்ற முபாரக், மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்தார். ஆனால் அவருடன் செல்ல அர்பியா மறுத்துவிட்டார்.
இரண்டு நாட்களில் அங்கு தங்கிய முபாரக், ஆனேக்கல்லுக்கு திரும்பிவிட்டார். நேற்று காலை மீண்டும், மாமியார் வீட்டிற்கு வந்தார். மனைவியை குடும்பம் நடத்த மீண்டும் அழைத்தார். அவர் வர மறுத்தார்.
கோபத்தில் அரிவாளால் வெட்டியும், சுத்தியலால் அடித்தும் மனைவியை கொலை செய்தார். பின்னர் ஒரு அறைக்குள் சென்று, கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜிகனி போலீசார் விசாரிக்கின்றனர்.

