sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விமான பயணிகள் மீது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியர் மீது குற்றச்சாட்டு

/

விமான பயணிகள் மீது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியர் மீது குற்றச்சாட்டு

விமான பயணிகள் மீது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியர் மீது குற்றச்சாட்டு

விமான பயணிகள் மீது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியர் மீது குற்றச்சாட்டு

1


ADDED : அக் 28, 2025 08:15 PM

Google News

1

ADDED : அக் 28, 2025 08:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: விமான பயணத்தில் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதியன்று சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றுகொண்டிருந்த லுப்தான்சா விமானத்தில் இரண்டு இளைஞர்கள் மீது 28 வயது இந்தியர் ஒருவர் முள் கரண்டியால் குத்தியதாகவும், சக பயணியை அறைந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

இது குறித்து மாசசூசெட்ஸ் மாகாண வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் விமானத்தில், பிரணீத் குமார் உசிரிபள்ளி 28, என்ற இந்தியர் பயணித்தார். இவர், பயணத்தின்போது சக பயணியான 17 வயது இளைஞரின் தோளில் முள்கரண்டியால் குத்தினார். அதே வயதுடைய இளைஞரின் தலையில் பின்புறத்தில் குத்தினார். 2வது இளைஞர்களின் தலையிலும் காயம் ஏற்பட்டது.

விமான ஊழியர் ஒருவரை அறைய முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பிரணீத்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் பாஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பிரணீத் குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மற்றும் 250,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.பிரணீத்குமாருக்கு தற்போது சட்டப்பூர்வ குடியேற்ற அந்தஸ்து இல்லை. அவர் முன்பு அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us