இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்: ஜெய்சங்கர் உறுதி
இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்: ஜெய்சங்கர் உறுதி
ADDED : ஜூன் 17, 2024 01:41 PM

புதுடில்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலேசகர் ஜேக் சல்லிவன் சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது. பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளோம். மிகவும் முக்கியமான விஷயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளோம். அது தொடர்பான நடவடிக்கைகள் துவங்க உள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.