இதுவே முதல்முறை; அந்தமான் கடற்பகுதியில் 5 டன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது இந்திய கடற்படை!
இதுவே முதல்முறை; அந்தமான் கடற்பகுதியில் 5 டன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது இந்திய கடற்படை!
ADDED : நவ 25, 2024 11:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அந்தமான் கடற்பகுதியில் மீன் பிடி படகு ஒன்றில், இருந்து 5 டன் போதைப் பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது.
அந்தமான் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்தமான் கடற்பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீன்பிடி படகு ஒன்றில், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.
அந்த மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் அவர்களிடம் இருந்து 5 டன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த நபர்களை பிடித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 5 டன் அளவுக்கு போதைப்பொருளை இந்திய கடற்படை கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.