'தொழில்துறையினர் கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படும்': நிர்மலா சீதாராமன்
'தொழில்துறையினர் கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படும்': நிர்மலா சீதாராமன்
ADDED : மே 30, 2024 07:33 AM

புதுடில்லி: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாயிலாக, சரக்குகள் மற்றும் சேவைகளைப் பெற்ற பெரிய நிறுவனங்கள், அதற்காக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும், என வருமான வரி சட்டத்தின் புதிய திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்தாத பட்சத்தில், இதற்கான செலவுத் தொகையை அந்நிறுவனங்களுக்கான வரி விதிப்பில் இருந்து கழிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வருமான வரி சட்டத்தின் புதிய திருத்தம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் அரசால் கொண்டு வரப்பட்டதாகும். இருப்பினும் அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து, ஜூலை மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.