ADDED : மார் 29, 2024 09:48 PM
புதுடில்லி:தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 'வைபை' உட்பட தடையற்ற இன்டர்நெட் இணைப்பு வழங்குவது குறித்து டில்லி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்ரித் பார்கவா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
டில்லி உட்பட தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் அமைந்துள்ள நீதிமன்ற வளாகங்களில் வைபை மற்றும் இன்டர்நெட் வசதி இல்லை. எனவே, வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்படுகின்றனர். நீதிமன்ற வளாகங்களில் இன்டர்நெட் வசதி செய்து தர டில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், இந்த பிரச்னையை டில்லி அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

