ADDED : மே 03, 2024 06:48 AM

பல்லாரி: ''அரசியலில் நீடிப்பது எளிது இல்லை,'' என்று, பல்லாரி பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலு கூறினார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பல்லாரி தொகுதியில் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்று உள்ளேன். மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது எனக்கு தெரியும். பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் நாங்களும் வெற்றி பெறுவோம்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டேன். ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி கிடைத்தது. அந்த தேர்தலில் பா.ஜ., 105 இடங்களில் வென்றது. ஒருவேளை 120 இடங்களில் வென்று பா.ஜ., ஆட்சி அமைத்து இருந்தால், துணை முதல்வர் ஆகி இருப்பேன்.
அரசியல் கடினமானது. பல ஆண்டுகள் அரசியலில் நீடிப்பது எளிது இல்லை. மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் வீட்டிற்கு செல்ல வேண்டியது தான். ஸ்ரீராமுலு தங்களுக்கு வேண்டும் என்று, பல்லாரி மக்கள் முடிவு செய்து விட்டனர். பல்லாரியில் அதிகம் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜனார்த்தன ரெட்டி, ஆனந்த்சிங் இங்கு நிறைய பணிகள் செய்து உள்ளனர். ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பா.ஜ.,வுக்கு வந்தது, கட்சிக்கு பலம் தரும். நான் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, ஹொஸ்பேட், சித்ரதுர்கா, செல்லகெரேயில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்தேன். பல்லாரியை வளர்ச்சி அடைய வைக்க, என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.