sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எடியூரப்பாவுக்கு எதிரான 'போக்சோ' வழக்கு தடை நீக்கும்படி கோர கர்நாடக அரசு முடிவு

/

எடியூரப்பாவுக்கு எதிரான 'போக்சோ' வழக்கு தடை நீக்கும்படி கோர கர்நாடக அரசு முடிவு

எடியூரப்பாவுக்கு எதிரான 'போக்சோ' வழக்கு தடை நீக்கும்படி கோர கர்நாடக அரசு முடிவு

எடியூரப்பாவுக்கு எதிரான 'போக்சோ' வழக்கு தடை நீக்கும்படி கோர கர்நாடக அரசு முடிவு


ADDED : ஆக 10, 2024 11:24 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான 'போக்சோ' வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அட்வகேட் ஜெனரலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 82, தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு பெண்ணின் 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பெங்களூரு சதாசிவநகர் போலீசில் சில மாதங்களுக்கு முன்பு புகார் செய்யப்பட்டது.

சகோதரர் மனு


இதன் அடிப்படையில், அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், புற்றுநோயால் அந்த பெண் உயிரிழந்தார். அதன் பின், அவரது சகோதரர் மனுத் தாக்கல் செய்து, வழக்கை கவனித்து வருகிறார்.

மேலும், நீதிமன்றத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி எடியூரப்பா விளக்கம் அளித்தார். தன்னை கைது செய்யக் கூடாது. விசாரணை நடத்தக் கூடாது என, உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றார்.

பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறியதாவது:

எடியூரப்பா மீது போக்சோ வழக்குப் பதிவாகி உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அட்வகேட் ஜெனரலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ., ஆட்சிக் காலத்தில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.

ரூ.47 கோடி


இந்த அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவராஜ் அர்ஸ் டிரக் டர்மினல் வாரியத்தில், 47 கோடி ரூபாய் லஞ்ச பணம், காசோலை மூலம் பெறப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணை அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுப்பது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். 'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு வேளை அனுமதி அளிக்கும்பட்சத்தில், சட்டப்படி எதிர்கொள்வோம்.

அதன் பின் நடக்கும் செயல்பாடுகளை கவனித்து, ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம். பல வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கவர்னர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன. ஒன்றிற்கு கூட விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளிக்கவில்லை.

ஆனால், 'மூடா' விஷயத்தில் மட்டும் அவசர அவசரமாக முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன என்று கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். சூழ்ச்சி அடங்கி உள்ளது. அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us