இன்சுலின் கேட்ட கெஜ்ரிவால்: மறுத்த சிறை நிர்வாகம்
இன்சுலின் கேட்ட கெஜ்ரிவால்: மறுத்த சிறை நிர்வாகம்
ADDED : ஏப் 22, 2024 05:24 PM

புதுடில்லி: நான் இன்சுலின் கேட்கவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி இருந்தது. கெஜ்ரிவால் இன்சுலின் கேட்கவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
புகார்
இந்நிலையில், நான் இன்சுலின் கேட்கவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.
ஆனால் திஹார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என கூறியதாக, செய்தித்தாளில் படித்ததும் வருத்தம் அடைந்தேன். நான் இன்சுலின் கேட்கவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது'' என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

