கெஜ்ரிவாலை கைது செய்தது சதி அமித் ஷா மீது அமைச்சர் 'பகீர்'
கெஜ்ரிவாலை கைது செய்தது சதி அமித் ஷா மீது அமைச்சர் 'பகீர்'
ADDED : மே 03, 2024 10:31 PM

புதுடில்லி:“டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கப் பிரிவினர் சதித்திட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவே தெளிவுபடுத்தியுள்ளார்,” என, டில்லி அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
இதுகுறித்து, அதிஷி சிங் கூறியதாவது:
செய்திச் சேனல் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில் 'அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபரில் முதன்முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய போதே கைது செய்ய திட்டமிட்டு இருந்தது' எனக்கூறியுள்ளார்.
அமலாக்கத் துறை சதித்திட்டம் தீட்டியே தொடர்ந்து சம்மன்களை அனுப்பி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.
அவை அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்கள் அல்ல, அவை பா.ஜ., சம்மன்கள்.
ஆனால், பா.ஜ., செய்தித் தொடர்பாளர்கள் பேசும்போது, அமலாக்கத் துறை சுதந்திரமான விசாரணை அமைப்பு; அது அனுப்பும் சம்மனுக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றனர். இப்போது அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான அமித்ஷாவே குட்டை உடைத்து விட்டார்.
பா.ஜ.,வின் 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தி விடுவார் என்பதற்காகவே கெஜ்ரிவாலை பார்த்து பா.ஜ., பயப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.