தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கூரியர் சேவை நடத்த கேரள அரசு பரிசீலனை

கூரியர் சேவை நடத்த கேரள அரசு பரிசீலனை

கூரியர் சேவை நடத்த கேரள அரசு பரிசீலனை


ADDED : ஆக 06, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: “கேரளாவில் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து கூரியர் பார்சல் சேவையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில சாலை போக்குவரத்துத் துறை பரிசீலித்து வருகிறது,” என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜான் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனத்திற்கான ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த, ‘வாட்ஸாப்’ டிக்கெட் முன்பதிவு முறை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண்: 149 ஆகியவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி.ஜான் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து கூரியர் பார்சல் சேவையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. எனினும், இது தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us