ADDED : ஆக 06, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
பாகூர்: சோரியாங்குப்பத்தில் குட்கா பொருட்களை விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் பகுதியில் பெட்டி கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர் போலீசார் சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில், ஒரு கடையில், அரசால் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த 5176 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களான குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த ரத்தினவேல், 48; என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
