கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் அதிரடி கைது; துபாயில் இருந்து தங்கம் கடத்தல்
கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் அதிரடி கைது; துபாயில் இருந்து தங்கம் கடத்தல்
UPDATED : மே 30, 2024 12:53 PM
ADDED : மே 30, 2024 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தங்கம் கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் டில்லி கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிவபிரசாத் என்பவரை கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் உதவியாளர் ?
இது குறித்து சசிதரூர் அளித்துள்ள அறிக்கையில்; சிவபிரசாத் எனது முன்னாள் உதவியாளர். இவர் இது போன்ற கைது தகவல் அறிந்து அதிர்ச்சியுற்றேன். இதில் யாருக்கும் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யட்டும் என கூறியுள்ளார்.