ADDED : மார் 01, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டயம்: ஜி.பி.எஸ்., எனப்படும் 'கிலன் பா சிண்ட்ரோம்' என்ற நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது, உடலின் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதித்து, செயல்பாட்டை முடக்குகிறது.
இந்நிலையில், ஜி.பி.எஸ்., பாதித்த 10ம் வகுப்பு மாணவி கேரளாவில் நேற்று உயிரிழந்தார். கோட்டயம் மாவட்டம் சேனப்பாடி பகுதியை சேர்ந்த பிரவீன் - அஸ்வதியின் மகளான கவுதமி, தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கவுதமிக்கு ஜி.பி.எஸ்., பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.