ADDED : மே 30, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேசம்பள்ளி: தங்கவயல் தாலுகாவில் உள்ள கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 20 நாட்களுக்குள் தேர்தல் நடத்த, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார்.
தங்கவயல் தாலுகாவில் 15 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்தும் ஒன்று. இதன் தலைவராக காங்கிரசின் ஜெயராம் ரெட்டி இருந்து வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியாக உள்ள இடத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். அதனால் கிராம பஞ்சாயத்து ராஜ் விதிகளின்படி, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்தலை மாவட்ட உதவி கலெக்டர் தலைமையில் 20 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான சுற்றறிக்கை நேற்று வழங்கப்பட்டுஉள்ளது.