ADDED : ஜூன் 08, 2024 04:29 AM

கோலார், : கோலார் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தங்கவயலில் நேற்று முன் தினம் நள்ளிரவு வரை தொடர் மழையால், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக், உரிகம் பேட்டை, ஆண்டர்சன் பேட்டை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.
விடிய விடிய வீடுகளில் புகுந்த தண்ணீரை, தட்டு முட்டு சாமான்களில் பிடித்து வெளியேற்றினர்.
தங்கவயல் தொகுதியின் சுந்தரபாளையம் பகுதியில் 8.6 செ.மீ., கேசம்பள்ளியில் 8.5 செ.மீ., ராம்சாகர், குட்டஹள்ளி, பேத்தமங்களாவில் 5.1 செ.மீ., பாரண்டஹள்ளி, கம்மசந்திரா ஆகிய இடங்களில் 4.2 செ.மீ., என்.ஜி.ஹுல்கூரில் 5.7 செ.மீ., மழையும் பதிவாயின.
பங்கார்பேட்டை தாலுகாவில் மாவளஹள்ளி 6 செ.மீ., மாகுந்தி 5:3 செ.மீ., கோலாரில் ஹரட்டியில் 4.1 செ.மீ., ஹூத்தூர் 2.9 செ.மீ., முல்பாகல் அங்கொண்டஹள்ளி 3.4 செ.மீ., மோதகபள்ளி 2.8 செ.மீ., சீனிவாசப்பூர், நம்பி ஹள்ளியில் 5.1 செ.மீ., சில்லிகானஹள்ளி 3.7 செ.மீ., மழை பெய்தது.
சீனிவாசப்பூர் ரயில்வே மேம்பாலம் நீரில் மூழ்கியது.
இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியவில்லை.
தங்கவயலில் நேற்று மாலை 5:00 மணிக்கு மழை பெய்ய துவங்கி, 5:40 மணி வரையிலும், மீண்டும் மாலை 6:15 மணிக்கு துவங்கிய கன மழை விடாமல் பெய்தது.
இதனால் சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லை; வெறிச்சோடி உள்ளது.