ADDED : மார் 23, 2024 11:18 PM
லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் சேருவதற்கு முன்பு ம.ஜ.த., ஆறு மாதங்களாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் புதுடில்லி சென்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு தான் கோலார் என்பது சற்று தாமதமாக தெரிய வந்துள்ளது. வேட்பாளர் யாரென அறிய அக்கட்சியினர் ஆர்வமுடன் உள்ளனர்.
முல்பாகல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் அல்லது பங்கார் பேட்டை மல்லேஸ் பாபு ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளர் ஆகலாம் என்று அக்கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சம்ருத்தி மஞ்சுநாத் கூறியதாவது:
காங்கிரசில் நான்கு கோஷ்டிகள். ஆனால் ம.ஜ.த.,வில் நோ கோஷ்டி. எங்களுக்குள் 'ஏ' டீம், 'பி' டீம், 'டூப்ளிகேட்' டீம் என எதுவும் கிடையாது. தேசிய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
நாளை (இன்று) மாலை 4:00 மணிக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் குமாரசாமி, சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். மூன்று தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிடுவார். கோலார் ம.ஜ.த.,வில் கோஷ்டி தகராறு இல்லவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்
.
- நமது நிருபர் -

