பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோல்கட்டா
பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோல்கட்டா
ADDED : மார் 29, 2024 10:53 PM

பெங்களூரு: பெங்களூரு அணிக்கெதிரான லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடைபெற்ற 10 வது லீக் போட்டியில் கோல்கட்டா அணியுடன் பெங்களூரு அணி மோதியது. டாஸ் வென்ற கோல்கட்டா அணி பீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விராத் கோஹ்லியும் டுபிளசியும் களமிறங்கினர். டுபிளசி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிரீன் 33 ரன்களும் மேக்ஸ்வெல் 28 ரன்களும் தினேஷ் கார்த்திக் 20 ரன்களும் சேர்த்தனர். விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 83 ரன் எடுத்தார். கோல்கட்டா அணியின் ரஸல் மற்றும் ரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
183 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து விளயைாடிய கோல்கட்டா அணியின் வீரர்கள் பில்சால்ட் 30 ரன்களும் சுனில் நரைன் 47 ரன்களும் வெங்டேஷ் ஐயர் அரைசதம்(50) அடித்தார். இறுதியில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் ரிங்கு சிங் 5 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். கோல்கட்டா அணி16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

