ADDED : மே 12, 2024 09:51 PM

தங்கவயல்,: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்ற தங்கவயல் மாணவி தர்ஷிதா, மற்றும்அவரது பெற்றோருக்குதங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா மற்றும் வார்டு கவுன்சிலர் கருணாகரன் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
ராபர்ட்சன் பேட்டையில் உள்ள மகாவீர் ஜெயின் உயர்நிலைப் பள்ளியில்படித்து வந்த மாணவி தர்ஷினி, கன்னடத்தில் 124, ஆங்கிலத்தில் 99, ஹிந்தியில் 100, கணிதம் 100, விஞ்ஞானம்100,சமூகவியல் 100 என 625 மதிப்பெண்ணுக்கு 623 மதிப்பெண்களை எடுத்து மாநிலத்தில் மூன்றாம் இடத்தை பெற்றார்.
தகவல் அறிந்த எம்.எல்.ஏ., ரூபகலா, சொர்ணா நகர் 12வது கிராஸ் சாலையில் வசித்து வரும் தர்ஷினி வீட்டுக்கு சென்றார். தர்ஷினியின்தந்தை ஆனந்த், தாய் பத்மஸ்ரீ ஆகியோருக்கும் மாணவி தர்ஷினிக்கும் பாராட்டு தெரிவித்தார்.
உடன், கவுன்சிலர் கருணாகரன் இருந்தார். 'இது தங்கவயலுக்கே கிடைத்த பெருமை' என தெரிவித்தனர்.