ADDED : ஜூலை 03, 2024 10:28 PM

மாண்டியா: மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, நாளை மாண்டியாவில் மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் குமாரசாமி. தற்போது இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், கனரக தொழில் துறை அமைச்சராக இருக்கிறார்.
மத்திய அமைச்சரான பின், முதல் முறையாக நாளை, மாண்டியாவில் மக்கள் தரிசனம் நிகழ்ச்சி நடத்துகிறார்.
நாளை காலை 10:00 மணிக்கு, மாண்டியா நகரின், அம்பேத்கர் பவனில் மக்கள் தரிசன நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மாவட்ட கலெக்டர் குமாருக்கு, குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தன்னை வெற்றி பெற வைத்த, மாண்டியா மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, இவரது விருப்பமாகும்.
மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அதே இடத்தில் தீர்வு காணும் நோக்கில், மக்கள் தரிசனம் நிகழ்ச்சி நடத்துகிறார்.