இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹார் ஒன்றாக இருக்கும்: பதவியேற்ற முதல் நாளில் நிதிஷ்குமார் திட்டவட்டம்
இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹார் ஒன்றாக இருக்கும்: பதவியேற்ற முதல் நாளில் நிதிஷ்குமார் திட்டவட்டம்
ADDED : நவ 20, 2025 09:14 PM

பாட்னா: இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹார் ஒன்றாக இருக்கும் என 10வது முறையாக பீஹார் முதல்வராக பதவியேற்ற முதல்நாளில் நிதிஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று, பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில், பீஹாரின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவியேற்பு விழாவில் நான் முதல்வராக பதவியேற்றேன். இந்த சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், பீஹார் மக்களுக்கு எனது வணக்கங்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீஹாரின் முழுமையான வளர்ச்சிக்கான உறுதியுடன், மத்திய அரசின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநிலத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். பீஹார் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன், நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக மாநிலத்தை மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.
இன்றைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

