ஸ்ரீசத்யசாய் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்
ஸ்ரீசத்யசாய் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்
UPDATED : நவ 20, 2025 10:13 PM
ADDED : நவ 20, 2025 09:06 PM

புட்டபர்த்தி: ஸ்ரீசத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீசத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் 44வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.,22) மாலை 4 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடைபெற உள்ளது.
பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழாவானது, பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவுடன் ஒத்துப் போகிறது. பிரசாந்தி நிலையத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாக்களின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாலும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தரான பேராசிரியர் ராகவேந்திர பிரசாத் துவக்க உரை நிகழ்த்த உள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்த உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த விழாவில் வேந்தரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சக்கரவர்த்தி, இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

