ADDED : ஏப் 27, 2024 05:57 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிட்ட தொகுதியில், ஓட்டு போடாமல் வேறு தொகுதியில் ஓட்டு போட்ட நிகழ்வு நடந்துள்ளது.
கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில், மாண்டியாவில் ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, துமகூரில் பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் சோமண்ணா, பெங்களூரு ரூரலில் பா.ஜ.,வின் டாக்டர் மஞ்சுநாத், கோலாரில் காங்கிரசின் கவுதம், சிக்கபல்லாபூரில் காங்கிரசின் ரக் ஷா ராமையா போட்டியிட்டனர்.
இவர்கள் அனைவரும், தாங்கள் போட்டி யிடும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். இதனால் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் ஓட்டு போட முடியவில்லை.
l குமாரசாமி ராம்நகர் பிடதி அருகே கெட்டகனஹள்ளியில் ஓட்டு போட்டார். அந்த தொகுதி பெங்களூரு ரூரல் தொகுதிக்கு உட்பட்டது
l பெங்களூரு கோவிந்த்ராஜ் நகரில் சோமண்ணா ஓட்டு போட்டார். அந்த தொகுதி பெங்களூரு வடக்கு தொகுதிக்குள் வருகிறது
l டாக்டர் மஞ்சுநாத், பெங்களூரு பத்மநாபநகரில் ஓட்டு போட்டார். இது பெங்களூரு தெற்கு தொகுதியில் வருகிறது
l கவுதம், ரக் ஷா ராமையா ஆகியோர், பெங்களூரில் தங்கள் வசிக்கும் இடங்களில் முறையே பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு தொகுதி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டனர்.

